வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மஸ்ஜிதுல் அக்ஸா மீதான ஆக்கிரமிப்புக்கு வயது 62......


இஸ்லாமியர்களின் சரித்திர புகழ்மிக்க, அருள்பாலிக்கப்பட்ட புனித பூமியான பலஸ்தீனை இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் கைப்பற்றி தீனுல் இஸ்லாத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டினார்கள்.நீதியையும் அமைதியையும் கடைபிடித்தார்கள். அந்த பூமியில் நூற்றாண்டுகாலமாக புனித தீனுல் இஸ்லாம் நிலைகொண்டிருந்தது. முஸ்லில்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என்று பலதரப்பட்ட மதத்தவர்களும் மிகவும் அந்நியோன்னியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதற்கு அன்றைய கலீபா உமர் (ரலி) அவர்கள்வழி செய்திருந்தார்கள் .அனைவருக்கும் நீதி கிடைத்தது. நிம்மதி இருந்தது. அது அன்றைய கிலாபத்துடைய காலம்.


என்றாலும் 1917ம் ஆண்டு அமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் ஏகாதிபத்தியத்தினால் அந்தப் புனித பலஸ்தீன பூமி சூரையாடப்பட்டு, 1948ம் ஆண்டில் அந்த பூமியின் சொந்தக்காரர்களல்லாத, மேற்குலகில் அலைக்கழிந்து கொண்டிருந்த வேறொரு அந்நிய சமூகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. இந்த அந்நிய சமூகமானது பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளால் காலாகாலமாக படுகொலைகளுக்கும் பல இன்னல்களுக்கும் உள்ளாகி, ஐரோப்பியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட யூத சமூகமாகும். இந்த யூத சமூகத்கை அகற்றுவதற்காக வேண்டி அவர்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்த இந்த புனித பூமி முற்றிலும் முஸ்லிம்களுக்கு சொந்தமானதே.இந்த புனித பூமியானது பல இஸ்லாமிய வரலாற்றுச்சிறப்பு மிக்கதானதாகும். நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயனம் கூட இங்கிருந்தே மேற்கொள்ளப்பட்டது.


"தன் அடியாரை (கஃபாவாகிய) சிறப்புமிக்க பள்ளியிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப்பரிசுத்தமானவன். (மஸ்ஜிதுல் அக்ஸாவகிய) அது எத்தகையதென்றால், நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்துள்ளோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச்சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன். (அலிஸ்ரா:1)"


மஸ்ஜிதுல் அக்ஸாவின் அழகிய தோற்றம்


எனவே பலஸ்தீனத்தின் வாடையைக்கூட நுகர்ந்திராத யூத சமூகத்தை அங்கே நிலைநாட்டுவதற்கு மிகக் கொடூரமான ஆட்சியொன்றை நிலைநாட்டினார்கள். இவ்வாறு உருவாக்கப்பட்ட அந்த கொடூர யூத அரசு அங்கிருந்த அமைதியை சீர்குழையச் செய்தது.அநியாயங்களையும் அட்டூழியங்களையும் அச்சமின்றி அதிகப்படுத்தியது.இனப்படுகொலைகளை சர்வசாதாரனமா செய்ய ஆரம்பித்தது.இவ்வாறு இஸ்லாமிய கிலாபத் முறியடிக்கப்பட்டு, கொடூர ஆட்சி ஆரம்மிக்கப்பட்டு இன்று 60 ஆண்டுகளையும் தாண்டி 62 வயதாகிவிட்டது.என்றாலும் அந்தப்புனித பூமியின் விடிவுகாலம் வெகுதொலைவில் இல்லை என்பதும் உறுதி.




இன்றைய பலஸ்தீன முஸ்லிம்களின் நிலை.....

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அன்புள்ள தாயே!

எனது பதிவிலே தாயைப் பற்றி கொஞ்சம் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். உண்மையிலே தாயப்பற்றி எவ்வளவு தான் சொன்னாலும் தாயன்பை அளவிட்டுக் கூறமுடியாது. அவ்வளவு ஆழமானது தாயன்பு.
கோடி பணமிருந்தும் நெஞ்சுக்குள்ள இன்பமில்ல....
என் தாயின் மடியில தான் என்னைக்குமே துன்பமில்ல....
என்றொரு பாடல் வரி (எனக்கு பிடித்த பாடல்) எனது மனதை அடிக்கடி தொட்டுக்கொண்டே இருக்கும். இப்படி தாயைப் பற்றி நிறைய சொல்லிட்டே போகலாம்.




கண்களில் உறக்கமில்லை - வயிற்றில்
நான் தரும் வேதனை பொறுக்கவில்லை..
என்றென்னை நீ வெறுக்கவுமில்லை
பிஞ்சு முகம் காண மனம் சுளிக்கவுமில்லை..

ஈரைந்து மாதங்கள் எனை தாங்கி நின்றாயே!
சுக வாழ்வு நான் வாழ தினம் பாலூட்டி வளர்த்தாயே!

நீராட்டி சீரட்டி நிலாக்காட்டி ஊணூட்டி
கவிபாடி தாலாட்டி நான் தூங்க உன்தூக்கம் இழந்தாயே!

இரவெல்லாம் விழித்திருந்தாய்
பகலெல்லாம் பசித்திருந்தாய்
தன் நெனப்பே மறந்திருந்தாய்
எனக்கேதும் ஆனதென்றால்...

எந்நாளும் நலமாக பார்மீது நான் வாழ
உன்வாழ்வு தந்த அன்புள்ள என் தாயே!
உன்கடன் நான் தீர்க்க
ஒரு காலும் முடியாது பாரினிலே!


தாயைப் பற்றி சொல்றதுன்னா என்னால மட்டுமல்ல கேக்குற ஒங்களால கூட இதுதான் என்று வரையறுத்து கூறவே முடியாதுங்க. ஏன்னா உலகத்துல எல்லாப் பொருட்களுக்குமே பெறுமதி இருக்கு. ஆனா இந்த தாய்க்குலத்துக்கு என்னனங்க விலைன்னு யராவது கேட்டா என்னன்னு சொல்றது??? ஒரு தாய் நினைச்சா எத்தன பேர வேண்டுமானாலும் பெற்றெடுக்கவும் முடியும் தத்தெடுக்கவும் முடியும். மாறாக எத்தன பேரு நெனச்சாலும் ஒரு தாய பெற்றெடுக்கவோ தத்தெடுக்கவோ முடியவே முடியாதுங்க. எமக்கு இறைவன் தந்த பெரிய சொத்து இந்த தாய்


நான் இப்போ வளர்ந்துட்டேன். எனக்கு சின்ன வயசுல என் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். அதை கொஞ்சம் மீட்டிப் பார்த்தேன். என் தாய் பட்ட கஷ்டம் போலதான் உலகத்துல இருக்கிற ஒவ்வொரு தாயும் கஷ்டப்பட்டிருப்பாங்க. நீங்களும் கொஞ்சம் நெனச்சிப்பாருங்க.... என் தாய் பட்ட வேதனைய நெனக்கும் போது கண்களில் இருந்து வடிந்த துளிகளை சேர்த்து சில வரிகளில் கவிதையாக வடித்திருக்கின்றேன். நீங்ககூட நிறைய திறமைசாலியா இருப்பீங்க. நிறைய கவிதை கூட எழுதுவீங்க. இதப் படிச்சிட்டு இது என்னங்க வெறுமனே ரெண்டு வரி தான் அப்டீன்னு நெனக்காம ஏதோ என் தாயப்பற்றி கொஞ்சம் யோசிச்சேன் ஏதோ என்னால முடிஞ்ச ரெண்டு வரி எழுதி இருக்கேன். ஒங்க கருத்து என்னன்னு கட்டாயம் சொல்லிட்டு போங்க.

மறுபடியும் வர்ரேன்....

வெள்ளி, 13 நவம்பர், 2009

என் இனியவளே.....


உயிரை உறுக்கும் பெண்ணே - உன்
கண்ணில் என்ன காந்தமோ.......

கண்ணை கிள்ளும் கனவே - உன்
முகத்தில் என்ன மோகமோ......

வெடிக்கத்துடிக்கும் எரிமலை - கூட
உன்னழகில் அகிம்சையானது

சுழன்று வரும் சூறாவளி - கூட
உன் சிரிப்பில் தென்றலானது

பொளர்ணமியே..................
பொறாமை கொள்ளும் பெண்ணே!
(நீ) பூமிக்குள் வளம் வரும் புது நிலவோ......

பூஞ்சோலை தேடி ஏங்கும்,
புதுப் பூவே......
பூக்களின் இளவரசி நீதானோ.........

மனம் மயக்(ங்)கும் மல்லிகை கூட
மயங்கும் உன் வாசம்............
மார்கழி குளிரில் என் சுவாசமே..........

மின்னல் கூட தடுமாறும் - உன் பார்வை
என் உலகின் ஒளிதானோ..............


முஹம்மது பஸ்லி
வெலிகம.